தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் பல உண்டு. இறுதியாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வரும் ஜனவரி 12-ம் தேதி கேப்டன் வின்னர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையமைக்க பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினரான உமைர் சந்து இந்த படத்தை பார்த்து விட்டதாக கூறி முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அவரது பதிவில் இதை பைசா வசூல் திரைப்படம் வழக்கம் போல தனுஷ் நடிப்பில் மிரட்டி விட்டார் என தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல் படத்திற்கு ஐந்துக்கு மூன்று புள்ளி ஐந்து மதிப்பெண்களையும் வழங்கியுள்ளார்.
#CaptainMilIer is Paisa Vasool flick. As always, #Dhanush “ King of Versatility ” in India.
3.5⭐️/5⭐️
— Umair Sandhu (@UmairSandu) January 9, 2024

