தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது.
முதல் பாகத்தில் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் லேடி கெட்டப்பில் கிட்டத்தட்ட அம்மனைப் போல ஒரு கெட்டப்பில் கையெழுத்து துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக இருக்கும் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்டரை வெளியிட்டுள்ள அல்லு அர்ஜுன் புஷ்பா 2 begins என பதிவு செய்துள்ளார்.
#Pushpa2TheRule Begins!!! pic.twitter.com/FH3ccxGHb8
— Allu Arjun (@alluarjun) April 7, 2023