: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் வலிமை. ஆக்ஷன், எமோஷன், குடும்ப பாசம் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார் தல அஜித்.
போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அவர் பைக் ஸ்டண்ட் காட்சிகளில் மிரட்டி எடுத்துள்ளார். ரசிகர்கள் பலரும் வலிமை படத்தை கொண்டாடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நேற்று ஒரே நாளில் ரூபாய் 36.17 கோடி வசூல் செய்து மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது. சென்னையில் மட்டும் ரூபாய் 1.82 கோடி வசூல் செய்துள்ளது. அஜித்தின் திரைப்பயணத்தில் இது தான் அதிகமான முதல் நாள் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
