தமிழ் சினிமாவில் தாதா 87 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ ஜி. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை இயக்கி வரும் இவர் இவரது இயக்கத்தில் மைக் மோகன் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஹரா.
வித்தியாசமான கதை களத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் மைக் மோகனுக்கு ஒரு கம் பேக் படமாக அமைந்துள்ளது. நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட 60 லட்சம் வரை முதல் நாளில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் 300 ஸ்கிரீனில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தில் பாடல்கள் சிறப்பாக இருப்பதாகவே பெண்கள் விரும்பும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
அதுமட்டுமின்றி படம் முழுவதும் காமெடிகளும் இடம் பெற்றுள்ளதாக படம் பார்த்தவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


