Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“பைட் கிளப்” படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி, விக்ரம் , லியோ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன‌.

இதைத்தொடர்ந்து ஜி ஸ்குவாட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி முதல் படமாக பைட் கிளப் என்ற படத்தை தயாரித்துள்ளார். உரியடி விஜயகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை அப்பாஸ் ரஹ்மத் என்பவர் இயற்றியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சண்டை காட்சிகள், குடிப்பழக்கம் கஞ்சா என வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெறும் படமாக வெளியாகி உள்ள இது திரைப்படம் முதல் நாளில் இரண்டு கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

Fight club movie first day collection update
Fight club movie first day collection update