தலைமுடி பிரச்சனைக்கு வெந்தய நீர் பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே பெரும்பாலானோருக்கு தலைமுடி பிரச்சனை வருவது வழக்கமான ஒன்று .அதனை தீர்க்க பல்வேறு ஷாம்புகளையும் பயன்படுத்துகின்றன. அப்படி பயன்படுத்தும் போது அது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. பக்க விளைவுகள் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் தலைமுடியை வைத்துக் கொள்வது குறித்து பார்க்கலாம்.
வெந்தயத்தை இரவில் ஊற வைத்துவிட்டு பிறகு காலையில் குடித்து வர வேண்டும் அப்படி தொடர்ந்து குடித்து வந்தால் தலை முடி அடர்த்தியாக வருவதை பார்க்க முடியும்.
இது மட்டும் இல்லாமல் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் முடியை நீளமாக வளரச் செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே ஆரோக்கியமான முறையில் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் வீட்டிலேயே முடியும் வளர்ச்சியை சரி செய்து ஆரோக்கியமாக வாழலாம்.