நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு வெந்தயம் ஒரு சிறப்பு மருந்தாக உள்ளது.
நம் உணவில் வெந்தயம் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது நமக்கு நோயிலிருந்து அதிக பாதுகாப்பை அளிக்கிறது. இது தோல் நோய் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் என பலவிதமான பிரச்சனைகளுக்கு சரியான மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது.
வெந்தயத்தில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து கரையக்கூடியதால் உடலில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் செயலை குறைக்கிறது. அப்படி கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்கும் போது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மேலும் வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள் நம் உடலில் ரத்தத்துடன் பாயும் சர்க்கரையை உடைப்பதால் சர்க்கரையின் அளவும் குறைந்து இன்சுலின் சரியாக இருக்கும்.
தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். அப்படி தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்தும் நம் உடலில் ஏற்படும் பல வகையான நோயிலிருந்தும் விடுபடலாம்

