தமிழ் சின்னத்திரையில் மிகப் பிரபலமான தொலைக்காட்சி சேனலான விளங்கி வருவது விஜய் டிவி. இந்தத் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல், அதில் நடிக்கும் பிரபலங்கள், தொகுப்பாளர்கள் ஆகியோரில் சிறந்தவர்களை தேர்வு செய்து விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது வழங்கி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த ஆறு வருடங்களாக இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில் ஏழாவது வருடமாக இந்த வருடமும் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில் சிறந்த பெண் தொகுப்பாளருக்கான பிரியங்காவுக்கு வழங்கப்பட்டது.
கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் பங்கேற்ற இவர் அதன் பின்னர் பெரிதாக எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர் சுற்றுலா சென்று ஊரைச் சுற்ற ஆரம்பித்து விட்டார். அப்படி இருக்கையில் ஆங்கரிங்கே செய்யாத அவருக்கு எப்படி சிறந்த தொகுப்பாளர் விருது வழங்கப்பட்டது என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
