Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 ப்ரோமோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.. என்ன சொல்லி இருக்காங்க பாருங்க

fans-trolls-about-pandian-stores-2-promo update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாச கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரியல் முடிந்த கையோடு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது. ஆனால் இதில் சுஜிதா குமரன் ஆகியோர் இடம்பெறப் போவதில்லை என்பது ப்ரோமோ வீடியோ மூலம் உறுதியாகி உள்ளது.

ஆமாம், ஸ்டாலின் அப்பாவாக நடிக்க அவரது மனைவியாக நிரோஷா நடிக்க உள்ளார். இவர்களுக்கு மூன்று மகன்கள். இப்படித்தான் இந்த கதை நகரப் போகிறது என்பது ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்தது.

இதைப் பார்த்த ரசிகர்கள் சீசன் 1க்கும் இரண்டுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் முதல் சீசனில் மூர்த்திக்கு மூன்று தம்பிகள் இரண்டாவது சீசனில் 3 பிள்ளைகள் அவ்வளவுதான் என கலாய்த்து வருகின்றனர்.

சீசன் 2 வேண்டாம் வேண்டாம் என சொல்லி பாரதி கண்ணம்மா ஒளிபரப்பாக தொடங்கியது. ஆனால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரண்டாவது சீசன் தொடங்க உள்ள நிலையில் இதாவது மக்கள் மத்தியில் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

fans-trolls-about-pandian-stores-2-promo update

fans-trolls-about-pandian-stores-2-promo update