தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பதில் இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கும் இப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வகையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து எடுத்துக் கொண்டிருக்கும் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு முன்பு வாரிசு படப்பிடிப்பில் குஷ்பூ விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ வெளியான போது, தான் வாரிசு படத்தில் இல்லை என்றும் பக்கத்து செட்டில் இருந்ததால் விஜய்யை சந்தித்தேன் என்றும் குஷ்பூ கூறியிருந்தார். ஆனால் தற்போது இப் புகைப்படத்தை பார்த்தவுடன் இவர் இப்படத்தில் இணைந்திருப்பதை உறுதி செய்த நெட்டிசன்கள் அவரை தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.
???????????? – Ipdi maatikuteengale..#Varisu #ThalapathyVijay #Kushboo pic.twitter.com/rhLIIW1bfr
— VCD (@VCDtweets) October 26, 2022