தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் அமெரிக்கா கிளம்பிய கார்த்திக் பிறகு அபிராமி தீபாவை வீட்டுக்கு அழைத்து வர அனுமதி கொடுத்த காரணத்தினால் திரும்பவும் வீட்டுக்கு வந்ததும் தீபாவின் குடும்பமும் இங்கு வருகிறது.
பிறகு கார்த்திக் மற்றும் தீபாவுக்கு முதல் இரவு நடத்த ஏற்பாடுகள் செய்ய ஐஸ்வர்யா, மீனாட்சி, மைதிலி மற்றும் ஜானகி என எல்லோரும் ஒன்று சேர்ந்து தங்களது முதல் இரவு அனுபவங்களை பகிர்கின்றனர்.
வெறும் வார்த்தைகளாக மட்டுமல்லாமல் இவர்களின் முதல் இரவு குறித்த காட்சிகளும் இடம்பெறுகிறது. இதையெல்லாம் பார்த்து சிங்கிள் வெறுப்பாகியுள்ளனர். சிங்கிள்ஸ் பாவம் உங்களை சும்மாவே விடாது எனவும் கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் இவ்வளவு அலும்பல் கூடாது தான் ஜீ தமிழ்.
