Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்துப் பாடலுக்கு அச்சு அசலாக நடனமாடிய விஜய் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

fans-creat-arabic-kuthu-song

தமிழ் திரையுலகில் மக்களின் இளைய தளபதி யாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்து நடித்து இருந்திருப்பார். இதில் அனிருத் இசையில் உருவான இரண்டு பாடல்களுக்கு இருவரும் இணைந்து நடனமாடி இருந்தனர். இந்த இரண்டு பாடல்களுமே உலகம் முழுவதும் வைரலாக பரவி இருந்தது. அதில் ஒரு பாடலான “அரபிக் குத்து” பாடலை பல பேர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவை போல விதவிதமாக நடனமாடி இணையத்தில் பதிவிட்டு வந்திருந்தனர்.

ஆனால் தற்போது விஜய்யின் ரசிகர்களான சிலர் அப்பாடலை திரைப்படத்தில் வந்தது போல் அச்சு அசலாக ஆடி இணையத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவை பார்த்து வாயடைத்து போன பலரும் இந்த வீடியோவை அவர்களின் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதனால் இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.