தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா மற்றும் கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்து வருகிறார்.
வீட்டுக்குத் தெரியாமல் ராதிகாவுடன் தொடர்பில் இருந்து வரும் கோபிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே பலர் இவரை மோசமாகத் திட்டி இருந்த நிலையில் அவர் லைவ் வீடியோவில் நான் நடிப்பது சீரியல் அது என்னுடைய கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் நான் அப்படியில்லை கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டாம் என வேண்டுகோள் வைத்திருந்தார்.
இந்த நிலையில் இதே சீரியலில் நடித்துவரும் எழிலுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் அவர் சமீபத்தில் காரில் எங்கோ வெளியூர் சென்றிருந்த போது அவரை பெண்கள் கூட்டம் சுற்றிச் சூழ்ந்து உள்ளது. எழிலை பாராட்டியும் கோபியை கண்டபடி திட்டியும் பலர் இருந்தனர்.
இது ஒரு சீரியல் அதில் நடிக்கிறார்கள் என்பதையும் மறந்து மக்கள் பலர் கோபியை திட்டு இருப்பது அவருடைய நடிப்புக்கு கிடைத்த பாராட்டு என பலரும் கூறி வருகின்றனர்.
