Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மைதானத்தில் விடா முயற்சி அப்டேட்.. ரசிகர்கள் வெளியிட்ட போட்டோ

fans-asked-vidaamuyarchi-movie-update

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இதன் வரவேற்பை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக அவரது 62 ஆவது படமாக “விடாமுயற்சி” என்னும் தலைப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் டைட்டிலை சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருந்த படக்குழு அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வரும் நிலையில்  T20 போட்டியில் விடாமுயற்சி அப்டேட் கேட்டு கையில் போடுடன் அமர்ந்திருக்கும் அஜித் ரசிகர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.