தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது. தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளோடு வெளியாக இருக்கும் இப்படத்தில் இருந்து அண்மையில் வெளியான மூன்று பாடல்கள் இணையதளத்தை தெறிக்க விட்டதை தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதியான இன்று மாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இதனால் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள் நேரு ஸ்டேடியம் அருகே கூட்டம் கூட்டமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
Fans have already started arriving at Nehru stadium ????????#Varisu #VarisuAudioLaunch pic.twitter.com/eaN4psXu0q
— Vijay Fans Trends (@VijayFansTrends) December 24, 2022

