கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் தளபதியின் புகைப்படத்தை வரைந்து சாதனை படைத்திருக்கும் ரசிகையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதாவது கேரளாவை சேர்ந்த அபர்ணா என்னும் 18 வயது பெண் ஸ்டென்சில் முறையில் கருப்பு பேனாவை வைத்து விஜயின் உருவத்தை வேகமாக வரைந்து சாதனை படைத்துள்ளார். அவரது அந்த புகைப்படம் தற்போது ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது. தீவிரமான தளபதியின் ரசிகையான அந்தப் பெண் செய்திருக்கும் இந்த சாதனையை பலரும் பாராட்டி அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
????INTERNATIONAL BOOK OF RECORDS: Largest stencil spiral art of an Indian Actor #Vijay
????ASIA BOOK OF RECORDS & INDIA BOOK OF RECORDS : Fastest stencil art portrait of #Thalapathy @actorvijay
Art by a Thalapathy fan girl ❤️ #Leo @actorvijay @Jagadishbliss pic.twitter.com/ltOAV85Ypf
— Vijay Fans Updates (@VijayFansUpdate) February 24, 2023

