Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆண்ட்ரியாவை பார்த்து பயந்தேன்.. வட்டம் படம் குறித்து பிரபல யூடியூபர் ஓபன் டாக்

famous youtuber talk about actress andrea

மதுபான கடை என்ற வெற்றி படத்தை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள படம் தான் “வட்டம்”. இப்படத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யாரவி, மஞ்சிமா மோகன், சமுத்திரக்கனி என முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம், ஹாட்ஸ்டாரில் ஓடிடியில் நேற்று வெளியானது. க்ரைம் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள ‘வட்டம்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல யூடியூபர் சசியும், மிக முக்கியமான நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். ‘நக்காலிட்டிஸ்’ என்ற யூடியூப் சேனலில், தனது காமெடியான சேட்டைகள் நிறைந்த வீடியோக்களை வெளியிட்டு அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் இப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர் தனது முதல் படத்திலேயே முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தது தனக்கு நல்ல அனுபவமாக இருந்தது எனக் கூறியுள்ளார். மேலும் குறிப்பாக ஆண்டிரியாவுடன் நடிக்கும் போது, அவர் Attitude காட்டுவார் என பயந்தேன். ஆனால், ஆண்ட்ரியா அப்படியெல்லாம் செய்யவில்லை, நல்ல ஃப்ரெண்ட்லியாகவே என்னை ட்ரீட் செய்தார் என, தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தைத் தொடர்ந்து தனக்கு ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

famous youtuber talk about actress andrea
famous youtuber talk about actress andrea