தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6ல் இரண்டாவது வெற்றியாளராக வெற்றி பெற்று அனைவருக்கும் பரிசயமானவர் ரக்ஷிதா சுரேஷ். தற்போது வெள்ளித்திரையில் பிரபல பின்னணி பாடகியாக வளர்ந்து வரும் இவர் இதுவரை VTK, கோப்ரா, PS1, பத்து தல உள்ளிட்ட படங்களில் இடம்பெற்றிருக்கும் பாடல்களை பாடியுள்ளார்.
இவர் இன்று காலை மலேசியாவில் கார் விபத்தில் சிக்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார். மேலும் அதில், ஹேர் பேக் உதவியால் சிறிய வெளிப்புற காயங்கள் மற்றும் உள்புற காயங்களுடன் தப்பியதாகவும், விபத்து ஏற்பட்ட 10 வினாடிகளில் முழு வாழ்க்கையும் கண்முன் வந்து சென்றதாகவும், தான் இன்னும் அந்த நடுக்கத்தில் இருந்து வெளிவரவில்லை என்றும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார். இவரது இந்த அதிர்ச்சியான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram