சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இராமேஸ்வரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த அவர் இப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் ஜோதிடர் வேடத்தில் நடித்துள்ளாராம்.