famous director shared interesting information about ajith vijay movie
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் அஜித் & விஜய். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ள இவர்கள் நிஜத்தில் நண்பர்களாக இருந்தாலும் சினிமாவில் இருவருக்கும் இடையே பலமான போட்டி எப்போதும் நிலவி வருகிறது. அந்த வகையில் 23 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற அஜித் – விஜய் குறித்து ஒரு சுவாரசியமான உண்மை சம்பவத்தை இயக்குனர் ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதாவது இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருக்கும்போது ராஜ்குமரன் “நீ வருவாய் என” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த இப்படத்தில் நடிகர் பார்த்திபன் நடித்திருந்த கேரக்டரை முதலில் விஜய் தான் நடிக்க இருந்தாராம் ஆனால் அவர் வேறு சில திரைப்படங்களில் பிஸியாக இருந்த காரணத்தால் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன் என இயக்குனரிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் அதற்கு முன்பே அந்த கேரக்டரில் நடிப்பதற்காக ராஜகுமாரன் அஜித்திடம் பேசி சம்மதம் வாங்கி இருக்கிறார். அதனால் என்ன செய்வது என்று யோசித்த ராஜ்குமரன் அஜத்திடம் நீங்க மெயின் ரோல் பண்ணுங்க விஜய் கெஸ்ட் ரோல் பண்ணட்டும் என கேட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு முடியவே முடியாது என அஜித் மறுத்துவிட்டாராம். இதன் காரணமாகவே விஜய் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக அப்பேட்டியில் இயக்குனர் கூறியிருக்கிறார். இந்த சுவாரசியமான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…