Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தில் சோழ மன்னனாக மாறி வீடியோ வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்..

famous cricketer posted a video in ps1 costume

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாக்கி உள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், என எக்கசக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் போல் ராஜா வேடமிட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அத்துடன் இணைத்து இயக்குனர் மணிரத்தினத்தை புகழ்ந்து வாழ்த்து கூறியுள்ளார். அதில் அவர், ஒரு புத்தகத்தை படமாக்குவது இயலாது ஒன்று ஆனால் மணிரத்தினம் அதை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார்” என்று கூறியுள்ளார். தற்பொழுது அந்த அசத்தலான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ashwin (@rashwin99)