கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “நா ரெடிதான்” பாடல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தற்போது வரை இணையதளத்தை அதிர விட்டு வருகிறது.
யூடியூபில் அதிக வரவேற்பை வரும் இப்பாடலுக்கு ரசிகர்கள் முதல் பல நட்சத்திர பிரபலங்கள் வரை ரிலீஸ் செய்து அசத்தி வரும் நிலையில் இப்பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் நடனமாடி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருப்பது இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
Venkatesh Iyer dancing in Leo movie song of Vijay. pic.twitter.com/nJg9SsJ9DJ
— Johns. (@CricCrazyJohns) July 1, 2023

