famous-celebrity-joined-kamal-hassan-political
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வினோதினி. பல்வேறு படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் பொன்னியின் செல்வன் 2 படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இவர் உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் நீளமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?
அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?
அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து.. இந்து மதக்கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?
அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒரு முறை கள்ள ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் debug பண்றதுக்கு காசில்ல சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ பகுத்தறிவு பேசுற கட்சி?
அஞ்ஞானவாதி: பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேக்குறாங்க சாமி. அதுலயும் யாகம்லாம் செய்யுறாங்க.
கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ கரப்ஷன்? மதவாதப் பிரிவினை?
அஞ்ஞானவாதி: எந்தப்பக்கம் நடந்தாலும் குரல் கொடுப்பேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, அப்போ ஏன் மய்யம்? ஒரு சீட்டுகூட இல்லையே?
அஞ்ஞானவாதி: சீட்டு குலுக்கிப்போட்டு இந்த பதவி எடுத்துக்கோ அந்தப்பதவி எடுத்துக்கோங்குறதுக்கு இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி. சார்ஜ் சீட் செய்யப்பட்ட ஆளுங்களும் இல்லையே சாமி… சீட்டு விளையாடுறத ஆதரிக்கிற கூட்டமும்…
கடவுள்: போதும் போதும்… சீட் என்று மூன்று முறைக்கு மேல் சொல்லியதால் நீ ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டாய்.
அஞ்ஞானவாதி: இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி.
ஆரம்பிக்கலாங்களா?
மய்ய அரசியல… என பதிவு செய்துள்ளார்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…