வீ.ஜே. பாவனா என்ற பாவனா பாலகிருஷ்ணன் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளரும், பின்னணி பாடகரும் மற்றும் நடனக் கலைஞரும் ஆவார். மாயந்தி லாங்கருக்குப் பிறகு இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆவார்.
வீ.ஜே. பாவனா ஒரு குறுகிய காலத்திற்கு ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி தொலைக்காட்சியில் நுழைந்தார். அவர் ராஜ் டிவி தொகுப்பாளராக சேர்ந்தார், பின்னர் அவர் ஸ்டார் விஜய் சேனலில் சேர்ந்தார் மற்றும் 2011 இல் சேனலில் முழுநேர தொகுப்பாளராக ஆனார். 2017 ஆம் ஆண்டில், அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் விளையாட்டு பத்திரிகையாளராக சேர்ந்து இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒளிபரப்புகளை தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து விளையாட்டு போட்டி மற்றும் நிகழ்ச்சிக்களை தொகுத்து வழங்கி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக எடுக்கப்படும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது வீ.ஜே. பாவனா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவறையுள்ள லியோ படத்தில் வெளிவந்த நா ரெடி பாடலுக்கு தோழியுடன் ஆடிய வீடியோ ஒன்று அணைத்து சமூக வலைத்தளத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
View this post on Instagram

