famous-actress-said-no-to-act-with-ajith movie
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி வந்தன.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும் இது கிட்டத்தட்ட உறுதியான தகவலாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தாமதமாகி வருவதால் திரிஷா இந்த படத்திற்கு கொடுத்த கால்சீட்டை வேறொரு படத்துக்கு கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் விடாமுயற்சி படத்தில் திரிஷாவுக்கு பதிலாக யார் நடிப்பார்? அல்லது படக்குழு திரிஷாவிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தி சம்மதிக்க வைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிஷா விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…