விஜய் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு நீக்கிய பிரபலம்

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’ படத்தை இயக்கிய தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வம்சி பைடிபள்ளி விஜய்யின் 66வது படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் அப்படத்தின் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவும் வரவில்லை.

இயக்குனர் வம்சி நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக ஐதராபாத்தில் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். அதில் கார்த்தி, கீர்த்தி சுரேஷ், சங்கீதா, சோனு சூட், தயாரிப்பாளர்கள் தில் ராஜு, அல்லு அரவிந்த், மெஹர் ரமேஷ், அனில் ரவிப்புடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வம்சி பைடிபள்ளிக்கு டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகை சங்கீதாவின் கணவரும், பாடகருமான கிரிஷ், “எனது அபிமானத்திற்கு உரிய மனிதர், இயக்குனர்களில் ஒருவரான வம்சிக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள். சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துகள் நண்பரே. விஜய் அண்ணாவுடன் உங்களுடைய அடுத்த படத்திற்காக வாழ்த்துகள், காத்திருக்கிறோம்,” என டுவீட் செய்துள்ளார். அதன்பின் அந்த டுவீட்டை நீக்கி விட்டார். ஆனாலும், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்ட விஜய் ரசிகர்கள், விஜய் 66 படத்தின் அப்டேட் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

Thalapathy 66 Latest Update
Suresh

Recent Posts

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

9 hours ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

12 hours ago

வெறுப்பேற்றும் ஹரிதா..சூர்யா கொடுத்த பதில்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

12 hours ago

விஜய் சாஃப்ட் ஆனவர்.. அஜித் பர்பெக்ட் ஃபேமிலி மேன்.. தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு.!!

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…

12 hours ago

காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

15 hours ago

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…

16 hours ago