தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து யாருடைய படத்தில் நடிக்கவுள்ளார் என்று இதுவரை தெரியவில்லை.
ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பிரபு, நயந்தாரா, ஜோதிகா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
சந்திரமுகி திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சியில், ரஜினியை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றும் காட்சி அமைத்திருக்கும். இந்த காட்சியில் நாசர் தான், ரஜினியை வீட்டை விட்டு வெளியேற்றுவார்.
ஆனால், முதலில் பிரபு தான், ரஜினியை வீட்டை விட்டு வெளியேற்றும்படி இயக்குனர் பி.வாசு கதையை உருவாக்கி இருந்தாராம். முதலில் சரி என்று சொல்லிவிட்டு, பின்பு அந்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று பிரபு கூறிவிட்டாராம்.
இதன்பின், இந்த காட்சியில் நடிக்க விஜயகுமாரை கேட்டாராம். அவரும் மறுத்ததால், ரஜினியை வெளியேற்றும் காட்சியில் தானகவே முன் வந்து நடித்து கொடுத்தாராம் நடிகர் நாசர் என்று தகவல் கூறுகின்றனர்.

