நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிக அளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க விரும்பியவர் விவேக். அதனால் அவர்மீது அபிமானம் கொண்ட பலரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நடிகர் அருண் விஜய்யும் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தனது இறுதி மரியாதையை விவேக்கிற்கு செலுத்தியுள்ளார். அருண் விஜய், தனது தந்தை விஜயகுமார் மற்றும் மகன் ஆர்ணவ் ஆகிய மூவரும் மரம் நடும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், “பூமியை பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை, அடுத்த தலைமுறைக்கு அழகாக கற்றுக்கொடுத்தீர்கள்.. எங்கள் எல்லோருக்கும் தூண்டுகோலாக இருந்ததற்கு நன்றி சார்” என கூறியுள்ளார் அருண்விஜய்.
Teaching the next generation the importance of keeping a greener planet!! Thank you Vivek Sir for inspiring us all.????#saveourearth #greenplanet #needfortrees #continuethetradition pic.twitter.com/pGv44Dxpmb
— ArunVijay (@arunvijayno1) April 19, 2021

