சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் சிட்டிசன்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வசுந்தரா தாஸ், நக்மா, மீனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அஜித்தின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த இப்படம், சூப்பர்ஹிட் ஆனது.
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அஜித் கிடையாதாம். உலக நாயகன் கமல் ஹாசன் தானாம்.
அப்போது, கமல் ‘ஹேராம்’ படத்தை இயக்கி, நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

