தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் ரஜினி இடையே தற்போது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான போட்டி ஏற்பட்டுள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என ஆரம்பித்து வைக்க அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினி தனது நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்பது போல பாடல் வரிகளை வைத்தது மட்டுமல்லாமல் இசை வெளியீட்டு விழாவிலும் காகம், பருந்து என்றெல்லாம் கதை சொல்லி இருந்தார்.
இப்படியான நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு அவர்கள் விஜயை ரஜினிகாந்த்தால் வசூலில் அடித்துக் கொள்ளவே முடியாது என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்போது ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் மட்டும்தான் மற்றபடி வேறொன்றும் கிடையாது எல்லாம் முடிந்து விட்டது கதம் கதம் என்று பேசி உள்ளார்.
இது குறித்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வசூலில் விஜய்யை அடிச்சிக்கவே முடியாது. அவர்தான் நம்பர் 1 – செய்யாறு பாலு, சீனியர் ரிப்போர்ட்டர்.
அந்த சூப்பர் பட்டம் மட்டும்தான் அவருக்கு. மத்தபடி வசூல் போட்டியில் முதலிடம் இல்லை. கதம். கதம். pic.twitter.com/CpQoPuSDVE
— Blue Sattai Maran (@tamiltalkies) August 13, 2023