Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு. வைரலாகும் போஸ்டர்

evidence-movie latest news

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தை இயக்கிய ஆர்.டி.எம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் சார்பில் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரான் ஈதன் யோஹான் இசையமைக்க கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். எம். தீபக் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு ‘எவிடன்ஸ்’ (Evidence) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.