தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நேற்று அரசு மற்றும் அருண் என இருவரும் குணசேகரன் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் சொத்தில் ஐந்து பங்கில் ஆதிரை பங்கை எழுதிக் கொடுக்கும்படி சொல்ல குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இது குறித்த வீடியோவில் அப்பத்தா எஸ்.கே.ஆர்-ஐ சந்தித்து உங்க தம்பி இங்க நடந்தது உங்ககிட்ட சொன்னாங்களா என்று தெரியல ஆனால் நான் சொல்கிறேன் என்று விஷயத்தை சொல்கிறார்.
அடுத்து குணசேகரன் அவங்க சொல்ற மாதிரி எல்லாத்தையும் எழுதி கொடுத்துலாம் இந்த கல்யாணத்தை நடத்த முடியாது என சொல்ல அப்படி கொடுத்தால்தான் என்ன என ஆதிரை கேட்க கதிர் அவளை அடிக்க பாய்கிறார்.
உடனே நந்தினி டேய் என்னடா என கோபத்தில் கதிரை எதிர்த்து சண்டையிடுகிறார். இதனால் இன்றைய எபிசோட் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
