தமிழ் சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற சீரியலை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் திருச்செல்வம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது இயக்கத்தில் எதிர்நீச்சல் என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் ஆதி குணசேகரன் அவர்கள் நடித்து வந்த மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு இந்த நிலைமை அப்படியே தலைகீழானது.
ஒரு கட்டத்தில் எதிர் நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சீரியல் முடிவடைந்த பிறகு முதல் முறையாக திருச்செல்வம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் பயணங்களும் மனிதர்களின் சந்திப்பும் எப்போதும் நம்மை புதுப்பிக்கும் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவின் கமெண்ட்களை பெரும்பாலான ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வியைத்தான் எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram