Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எதிர்நீச்சல் சீரியலில் கடைசியாக நடித்தது இதுதான்.. வைரலாகும் ஃபோட்டோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் வில்லனாக ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் மாரிமுத்து.

டைமிற்கு ஏற்ற கவுண்டர் அதிரடியான டயலாக்குகள் என இந்த சீரியலின் முரட்டு வில்லனாக இருந்தாலும் மக்களின் மனதில் சீரியல் நாயகனாக இடம் பிடித்திருந்தார். எதிர்நீச்சல் சீரியலில் மிகப்பெரிய தூணாக இருந்து வந்த இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆதி குணசேகரனாக மாரிமுத்துவின் கடைசி எபிசோட் இன்று ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த புகைப்படம் மற்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இவருடைய குரல் மாற்றப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.