Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

யானையுடன் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் மதுமிதா.

இவர் இதே சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகையும் சேர்ந்து சுற்றுலா சென்று உள்ளனர். இருவரும் பீச்சில் ஆட்டம் போடும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து குட்டி யானையுடன் க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன.