தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ரேணுகாவின் அம்மா எதையாவது ஒரு தொழில் பண்ணி அந்த ஆள் மூஞ்சில கரிய பூசனும் என்று கூறுகிறார்.
அடுத்து ஜனனியின் அப்பத்தா ரெண்டு நாள் நான் இங்கு தங்கிட்டு வரேன் என்று சொல்ல அதைக் கேட்டு ஞானம் நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன் என்று கோபப்பட ரேணுகா அமைதியாக இருங்கள் என்று அடக்குகிறார். கோபத்தில் கதிர் கையில் இருக்கும் பொருளை தூக்கி வீசுகிறார்.
அடுத்ததாக ஒரு கான்ஸ்டேபிள் போய் குழந்தையை தேடி கண்டுபிடிங்க என்று ஜீவானந்தத்தை தப்பிக்க வைக்கிறார். இதனால் ஈஸ்வரி பதற்றம் அடைய அந்த போலீஸ் கண் ஜாடையில் கவலைப்படாதீங்க என்று கூறுகிறார்.
போலீசிடமிருந்து தப்பிய ஜீவானந்தம் தர்ஷினியை கண்டுபிடித்து குணசேகரனுக்கு ஆப்பு வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


