தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.
அதாவது குணசேகரன் எல்லாரையும் ஏமாற்றி அப்பத்தாவிடம் இருந்து 40 சதவீதம் ஷேர் எழுதி வாங்கிய விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தது. இதனால் அவருடைய சொத்துக்களை விசாலாட்சியின் பெயரில் எழுதி வைக்க சொல்ல உன்னை எனக்கு சமமா கொண்டு வர விருப்பம் இல்லமா ஏற்கனவே இடம் கொடுக்காமல் இங்கே நிறைய பேர் ஆடிட்டு இருக்காங்க என அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதனால் ரேணுகா பொம்பளைங்கனா உங்களுக்கு அவ்வளவு மட்டமா போயிடுச்சா என நறுக்கென கேள்வி கேட்கிறார்.
இதையடுத்து ஜனனி இப்ப தெரியுதா உங்க பிள்ளையோ பித்தலாட்டம்.. இப்போ என்ன பண்ண போறீங்க என கேள்வி கேட்க விசாலாட்சி அதிர்ச்சி அடைகிறார்.


