தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த சில தினங்களாக மாரிமுத்து மறைவால் குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பெருமை வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் எல்லோரும் ஒன்று கூடி இருக்க அப்பத்தா ஏம்பா காலேஜ் பீஸ் கட்டல என்று தர்ஷனிடம் கேள்வி கேட்க அவன் அந்த ஆள் காசுல படிக்க எனக்கு விருப்பமில்லை என்று பதில் கொடுக்கிறான்.
இதைக்கேட்ட ஞானம் என்னடா அந்த ஆள் இந்த ஆளு மரியாதை இல்லாம பேசிக்கிட்டு இருக்க என்று ஆவேச பட கதிர் அடிக்கப் பாய என் புள்ள மேல கை வைக்க எவனுக்கும் உரிமை கிடையாது சொல்லிட்டேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
