தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் 40 சதவீத சேரை குணசேகரனுக்கு எழுதி கொடுத்துவிட்டு மண்டபத்தில் இருந்து கிளம்பிய அப்பத்தா நடு ரோட்டில் மயங்கி விழுந்து கிடக்க ஜனனி மட்டும் சக்தி என இருவரும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கதிர் அத்தான் மண்டபத்துல வச்சி மொத்தமா முடிச்சிட்டீங்களே எங்க கூட்டிட்டு போறீங்க என கேட்க குணசேகரன் என்ன முடிந்தது? இன்னும் எதுவும் முடியல இப்பதான் முடிக்க போறேன் என குணசேகரன் சூட்சகமாக பேசுகிறார்.
மறுபக்கம் நந்தினி அப்பத்தா பற்றி வீட்டில் சொல்லிவிடலாம் என சொல்ல ஜனனி எதுக்கு சொல்லணும்? அது சொல்லக்கூடாது அவங்க யாரு வரக்கூடாது என கோபப்படுகிறார்.


