தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி இன்னைக்கு என்ன வேணா பண்ணுங்க, நான் தலையிட மாட்டேன் ஆனா இங்க இருந்து ஜெயிச்சு காட்டுங்கன்னு வசனம் எல்லாம் பேசினீங்க என்று குணசேகரனைப் பார்த்து கேள்வி கேட்க குலசேகரன் பணத்தைக் கேட்டு என்கிட்ட வந்து டான்ஸ் ஆடுவான் நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கணுமா என்று கேட்க குணசேகரன் அண்ணன் அவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை என்று பதிலடி கொடுத்து திணற விடுகிறார்.
அதன் பிறகு ஞானம் எனக்கு என்னவோ அவன் கூட சேர்ந்து தொழில் பண்றது சரியா வரும்னு தோணல என்று சொல்ல தர்ஷினி அவர் என்ன எங்க அப்பாவோட மோசமானவரா என்று கேள்வி கேட்கிறார்.
