தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி யாரோ ஒருவரிடம் போனில் இங்க பாருங்க இந்த காது குத்துக்கும் குணசேகரன் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து மத்தவங்க ரெண்டு பேருக்கும் ஆதி முத்து ஐயா தானே அப்பன் என்று ரேணுகா கேட்டதும் விசாலாட்சி அதிர்ச்சி அடைந்து ஏய் என அதட்ட கோவம் வருது இல்ல அதுல கொஞ்சமாவது உங்க பெரிய புள்ள கிட்ட காட்டுங்க என்று சொல்கிறார்.
இதை தொடர்ந்து ஈஸ்வரி வீட்டுக்கு வர கரிகாலன் அந்த புஷ்பானத்தை விடுங்கள். ஆட்டம் பாமே வந்து நிக்குது என்று சொன்னது குணசேகரன் தர்ஷினியை பார்த்து ஷாக் ஆகிறார்.
