தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கரிகாலன் இன்னும் அரை மணி நேரத்தில் இங்க இருந்து கிளம்பணும், இல்ல நான் அவனை மேல அனுப்பிடுவேன் என ஆவேசப்படுகிறார்.
இதையடுத்து நந்தினி ஜனனிக்கு போன் பண்ணி எல்லோரும் கேட்கும் படி ஸ்பீக்கரில் போட்டு புது ஆபிஸ் எல்லாம் எப்படி இருக்கு என கேட்கிறார். நம்ம வீட்ல இருக்க மாதிரியே ஒரு குணசேகரன் இங்கேயும் இருக்கானு சொல்கிறார்.
இதை கேட்டு விடும் குணசேகரன் எல்லா இடங்களிலும் ஒரு குணசேகரன் இருப்பான் என வசனம் பேசுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் குணசேகரனே ஜெயிக்க அவரை மட்டுமே வச்சி சீரியல் எடுக்கலாம் என நொந்து கொள்கின்றனர்.
ஒரே காலத்தில் ஆஹானு பேசப்பட்ட எதிர் நீச்சல் சீரியல் தற்போது இழுவையாக மாறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
