தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஈஸ்வரி வைக்கிற டிமாண்ட்டை நீங்க நிறைவேத்தி தான் ஆகணும் என்று வக்கீல் சொல்ல நான் எதுக்கு என் சொத்து கொடுக்கணும் இது என் சுய சம்பாத்தியம் என்று குணசேகரன் சொல்கிறார்.
வக்கீல் அவர்கள் கேட்கிறது நீங்க கொடுத்து தான் ஆகணும் இல்லனா அவங்க உங்க மேல வழக்கு தொடுப்பாங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இதையடுத்து ஈஸ்வரி பணத்தை விட்டு அவர் எல்லாரையும் ஆட்டி பார்க்கலாம்னு இருக்காரு இந்த முறை சும்மா விட போறதில்லை என முடிவெடுக்கிறார்.
இதைத்தொடர்ந்து நந்தினியின் அப்பா பத்திரிக்கையில் மாப்பிள்ளையோட அப்பா, அம்மா பேர் போடணும் என்று குணசேகரன் இடம் பேசிக்கொண்டு இருக்க என் அப்பா பேரு போறதுக்கு இவங்க கிட்ட ஒன்னு அனுமதி வாங்க தேவையில்லை என்று கோபப்பட்டு விசாலாட்சியிடம் வாக்குவாதம் செய்கிறார்.
