தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அதாவது சக்தி அப்பத்தா விஷயத்தில் உண்மையை வெளியே கொண்டு வராமல் விடமாட்டோம் கண்டிப்பா கண்டுபிடிப்போம் என சொல்ல குணசேகரன் விழி பிதுங்கி நிற்கிறார்.
அடுத்ததாக காலேஜுக்கு வந்த ஈஸ்வரி என்னால வேலை செய்ய முடியாது என வந்த வாய்ப்பை மறுத்து விட்டு கண்ணீருடன் வெளியேறுகிறார். குணசேகரன் தன்னுடைய இரண்டு தம்பிகளுடன் ஈஸ்வரி வேலைக்கு சேர உள்ள காலேஜ்க்கு வருகின்றனர்.


