Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனனியால் ஷாக்கான குணசேகரன். அனல் பறக்கும் எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்

ethir-neechal-serial-episode

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அப்பத்தா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்க குணசேகரன் அவரை ஏமாற்றி 40 சதவீத ஷேர் வாங்கிய நிலையில் ஜனனியும் ஈஸ்வரியும் திட்டம் போட்டு குணசேகரனுக்கு பதிலடி கொடுக்க முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஜனனி நீங்க திட்டம் போட்ட மாதிரி 40% உங்களுக்கு வந்து சேராது என சொல்லி அங்கிருந்து கிளம்ப ஏய் எங்கமா போற? அவ என்னமா சொல்லிட்டு போறா? என குணசேகரன் கேட்கிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி பூஜை அறையில் இருந்து அப்பத்தா கையெழுத்து போட்டுக் கொடுத்த பைலை எடுத்து ஜனனியுடன் தம்ப்ஸ் அப் காட்டுகிறார். இதனால் இன்றைய எபிசோட் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். ‌‌ ‌‌

ethir-neechal-serial-episode

ethir-neechal-serial-episode