தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலை கோலங்கள் போன்ற வெற்றிகரமான சீரியல் இயக்கிய திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது பெரிய அளவிற்கு வரவேற்பு இல்லாமல் இருந்து வருகிறது. சீரியலில் கதைக்களம் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் வேக வேகமாக இந்த சீரியலை முடிக்கின்றனர்.
இதற்கான காரணம் சன் டிவிக்கும் திருச்செல்வத்துக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என சொல்லப்படுகிறது. சீரியலை முடிப்பதில் திருச்செல்வத்துக்கு விருப்பமில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
