Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருவருப்பான காட்சியால் சர்ச்சையில் சிக்கும் எதிர்நீச்சல். விமர்சிக்கும் ரசிகர்கள்

ethir neechal serial contravesry issue update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் குணசேகரன் ஆதிரையை வலுக்கட்டாயமாக பிடித்து கரிகாலனுக்கு கல்யாணம் செய்து ஜான்சி ராணி வீட்டில் விட்டு வந்த நிலையில் இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு நடைபெற்றது.

ஆதிரை இதில் விருப்பமில்லாமல் இருக்க அதையும் மீறி கரிகாலன் தனது ஆசைகளை கண்ட்ரோல் பண்ண முடியாமல் தவித்து பேசுவது சைகை காட்டுவது என இடம்பெற்ற காட்சிகள் முகம் சுழிக்க வைத்துள்ளது.

அதை விட இன்னும் கொடுமையாக முதலிரவு அறைக்குள் அத்து மீறி நுழைத்து சாராயத்தை எடுக்கும் ஜான்சி ராணி நீ இன்னும் ஆரம்பிக்கலயா டா என்று பேசிய வசனங்கள் எல்லாம் அருவருக்கத்தக்க வகையில் இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ethir neechal serial contravesry issue update
ethir neechal serial contravesry issue update