தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்று கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா.
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார். இருந்தாலும் எதிர்நீச்சல் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இப்படி அந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் குடி போதையில் ஆண் பெயருடன் சேர்ந்து ராங் ரூட்டில் காரை ஓட்டி வந்து எதிரே வந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.
பிறகு மதுமிதாவை அழைத்துச் சென்று போலீஸ் விசாரணை மேற்கொள்ள ராங் ரூட்டில் வந்தாலும் நாங்கள் பொறுமையாக தான் வந்தோம் போலீஸ் தான் வேகமாக வந்து தங்கள் மீது மோதி விட்டதாக தெரிவித்துள்ளார்.
