Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எதிர்நீச்சல் ஜனனி.

ethir-neechal-fame-janani-have-a-baby

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நாயகி ஆக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா.

கன்னட சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் எதிர்நீச்சல் மூலமாக முதல்முறையாக தமிழுக்கு வந்துள்ளார். இந்த சீரியல் மூலம் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

மேலும் இவருக்கு நிஜ வாழ்க்கையில் திருமணமாகி விட்டது என்ற தகவலை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மதுமிதா குழந்தையுடன் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதைப் பார்த்து பலரும் இவருக்கு குழந்தையும் இருக்கா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் இது மதுமிதாவின் குழந்தை இல்லை அவரது அக்காவின் குழந்தை என தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ethir-neechal-fame-janani-have-a-baby
ethir-neechal-fame-janani-have-a-baby