Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குணசேகரனுக்கு வந்த பிரச்சனை. நந்தினி செய்த வேலை.இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்

Ethir Neechal Episode Update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

குணசேகரன் பக்கவாதம் ஏற்பட்டு ஒரு பக்கம் கை, கால் விளங்காமல் மருத்துவமனையில் படுத்திருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் குணசேகரனை பார்க்க வரும் பெண்கள் என்னடா ஆச்சு என கரிகாலனிடம் கேட்க மாமாவுக்கு ஒரு பக்கம் கை கால் விளங்காமல் போயிடுச்சு என சொல்கிறான்.

இதைக் கேட்ட நந்தினி என்னடா இவ்வளவு சாதாரணமா சொல்ற என்று கேட்க இன்னும் உசுரோட தான் இருக்காரு அது போதுமில்ல என்று கூறுகிறார். அடுத்ததாக நந்தினி குணசேகரனை எட்டி பார்க்க அவர் என்னமா நந்தினி எட்டி பார்க்கிற என கேட்கிறார்.

உங்களை இந்த நிலைமையில் பார்க்க சாரி என நந்தினி சொல்ல குணசேகரன் இந்த நேரத்தில் இங்கிலீஷ் ரொம்ப அவசியமா என நக்கல் செய்கிறார்.

Ethir Neechal Episode Update
Ethir Neechal Episode Update